முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning

முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning

முகுந்த மாலா 18

ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா꞉ |
நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்-
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு꞉ || 18 ||

விளக்கம்:

ஆபத்துக்களாகிய அலைகள் நிறைந்த பிறவிக் கடலில் நன்றாக மூழ்கி இருக்கின்ற ஓ மனிதர்களே! உங்களுக்கு உயர்ந்த நன்மையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள் பலவிதமான அறிவுகளை ஒதுக்கிவிட்டு மனதில் ஓம் எனும் பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணாய என்னும் இந்த மந்திரத்தை நமஸ்காரத்துடன் மனதில் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்.