முகுந்த மாலா 20 | Mukunda Mala Stotram 20 in Tamil with Meaning
ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன ஶிரஸா கா³த்ரை꞉ ஸரோமோத்³க³மை꞉
கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா |
நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ளத்⁴யானாம்ருதாஸ்வாதி³னாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் || 20 ||
விளக்கம்:
தாமரைக் கண்ணனே! அமைக்கப்பட்ட கை கூப்புதலோடும் வணங்கிய தலையோடும் மயிர்க் கூச்சத்துடன் கூடிய தேகத்தோடும் தழுதழுத்த குரலோடும் வெளியில் வழிந்தோடும் கண்ணீருடைய கண்களோடும் எப்பொழுதும் உன் திருவடித் தாமரைகளைத் தியானம் செய்வதாகிய அமிருத ரஸத்தைப் பருகுகிற எங்களுக்கு எப்பொழுதும் வாழ்க்கையானது திறைவுள்ளதாக ஆகட்டும்.