முகுந்த மாலா 27 | Mukunda Mala Stotram 27 in Tamil with Meaning

முகுந்த மாலா 27 | Mukunda Mala Stotram 27 in Tamil with Meaning

மஜ்ஜன்மன꞉ ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே
மத்ப்ரார்த²னீய மத³னுக்³ரஹ ஏஷ ஏவ |
த்வத்³ப்⁴ருத்யப்⁴ருத்யபரிசாரகப்⁴ருத்யப்⁴ருத்ய-
ப்⁴ருத்யஸ்ய ப்⁴ருத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² || 27 ||

விளக்கம்:

மது, கைடபன் என்பவர்களை அழித்தவரே என் பிறவிக்கு பயன் இதுதான் (என்றால்) உம்மிடம் வேண்டக்கூடிய எனக்குச் செய்யவேண்டிய அநுக்ரஹம் இதுதான் ஏ உலக நாதனே உன் அடியார்க்கு அடியாரின் என்ற வரிசையில் ஏழாவது அடியானாக என்னை நினைப்பாயாக.