முகுந்த மாலா 36 | Mukunda Mala Stotram 36 in Tamil with Meaning

முகுந்த மாலா 36 | Mukunda Mala Stotram 36 in Tamil with Meaning

ஶ்ரீனாத² நாராயண வாஸுதே³வ
ஶ்ரீக்ருஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே |
ஶ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே || 36 ||

விளக்கம்:

லஷ்மீ பதியே! நாராயணனே! வசூதேவ குமாரனே! கண்ணபிரானே! பக்தர்களின் அன்பனே! சக்கரத்தைக் கையில் ஏந்துபவனே! பத்மநாபனே! அச்சுதனே! கைடபனை அழித்தவனே! ஸ்ரீ ராமா! தாமரைக் கண்ணனே! ஹரியே முராரியே.