முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning

முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning

முகுந்த மாலா 4

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வ-மத்வந்த்வ-
ஹேதோ꞉கும்பீபாகம் குருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |ரம்யா
ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்பாவே பாவே ஹ்ருதய-
பவநே பாவயேயம் பவந்தம் || 4 ||

விளக்கம்:

ஹே ஹரே! உன் இரு திருவடிகளையும் முக்திக்காகவோ கொடியதான கும்பீபாகம் என்னும் நரகத்தை நீக்கவோ, அல்லது சொர்க்க லோகத்தில் இருக்கும் நந்தவனத்தில் மெத்தென்ற கொடி போன்ற பெண்கள் நிறைந்திருக்கும் அந்த நந்தவனத்தில் வாழும் சுகத்திற்காகவோ நான் வணங்கவில்லை. என் இதயமாகிய கோயிலில் ஒவ்வொரு பிறவியிலும் உன்னை நினைக்கவேண்டும் என்பதற்காகவே உன்னை நான் வணங்குகிறேன்.