முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning

முகுந்த மாலா 8 | Mukunda Mala Stotram 8 in Tamil with Meaning

முகுந்த மாலா 8

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த³மந்த³ ஹஸிதானநாம்பு³ஜம்
நந்த³கோ³பதனயம் பராத் பரம்
நாரதா³தி³முனிவ்ருந்த³வந்தி³தம் || 8 ||

விளக்கம்:

நான் எப்பொழுதும் புன்முறுவல் பூக்கும் திருமுகத் தாமரையை யுடையவனும் நந்த கோபரின் திருமகனும் எல்லோரிலும் உயர்ந்தவனும் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படடவனுமான ஸ்ரீ மஹா விஷ்ணுவையே எப்பொழுதும் சமரிக்கிறேன்.