முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning

முகுந்த மாலா 9 | Mukunda Mala Stotram 9 in Tamil with Meaning

முகுந்த மாலா 9

கரசரணஸரோஜே காந்திமன்னேத்ரமீனே
ஶ்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலே(அ)கா³த⁴மார்கே³ |
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன꞉ கே²த³ மத்³யத்யஜாமி || 9 ||

விளக்கம்:

ஹரி என்பதே ஒரு தடாகம் இந்த தடாகத்தில் பகவானுடைய கைகால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்து நான், இத்தடாகத்தில் மூழ்கி இறைவனது திருமேனி ஒளியாகிய ஜலத்தை பருகி எனது தாகத்தை அகற்றி கொள்கிறேன்.