Thayumanavar Songs – பொன்னை மாதரை
18. பொன்னை மாதரை பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1. தன்ன தென்றுரை சாற்று வனவெலாம் நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன் இன்னம் என்னை யிடருறக் கூட்டினால் பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2. ஆவி யேயுனை யானறி வாய்நின்று சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன் பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3. கோல …