Perumal Slogam – பெருமாள் ஸ்லோகம்

நோய்களை குணமாக்கும் பெருமாள் ஸ்லோகம்

நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்
ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது

ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி
ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது
தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:
ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:
பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது
ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:
ஸாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:

– ஸ்ரீவெங்கடேஸ்வர வஜ்ரகவசம்.

பொதுப்பொருள்:

அனைத்திற்கும் காரணமான நாராயணனே. தங்களின்கவசம் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்கள் கொண்டு விஸ்வரூபம் எடுத்தவரே, என் சிரத்தைக் காப்பீராக. ப்ராணனுக்கே ப்ராணன் அருளும் தாங்கள் என் ப்ராணனை ரட்சிக்க வேண்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை சதாசர்வகாலமும் காக்கவேண்டும். 

தேவர்களுக்கெல்லாம் தேவன் என் தேகத்தைக் காக்க வேண்டும். அலர்மேல்மங்கையின் மணாளன் சர்வகாலமும் என்னைக் காக்கவேண்டும். என் கர்மங்களையெல்லாம் அகற்றி என் உடலை வஜ்ரம் போல் உறுதிமிக்கதாகக் காப்பீராக.