Navarathri Recipes – Vellai Kondakadalai Sundal

 1,147 total views,  2 views today

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்


என்னென்ன தேவை? 

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3, கடுகு,
உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-4 டிஸ்பூன்,
எண்ணெய்-2 டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.  இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். சத்தான சுண்டல் ரெடி!

குறிப்பு: கடலையை வேக வைத்த தண்ணரை கீழே கொட்டாமல்,புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.