Diwali Recipes – beetroot halwa

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – ஒன்று

உருளைக்கிழங்கு – ஒன்று

சக்கரை – ஒரு கப்

பால் – 3 கப்

சோள மாவு – ஒரு தேக்கரண்டி

முந்திரி – 8

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – கால் கப்

செய்முறை

*பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.

*ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும்.

*அதனுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்த்து இடைவிடாது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.

*கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

சூடாக பரிமாறவும்.