மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam?

மச்ச அவதாரம் என்றால் என்ன? | What is Macha Avatharam?

மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.