3,679 total views, 2 views today
நவராத்திரி முத்தாலத்தி கோலம்
முத்தாலத்தி கோலம் என்பது ஜெவ்வரிசிகளை கொண்டு கோலம் போடுவது .
நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளுக்கான நவக்கிரக கோலங்களை தட்டில் அல்லது ஏதோ ஒரு base சில் போட்டு அதன் மீது ஜெவ்வரிசிகளை ஒட்டி அலங்கரித்தால் அதுவே முத்தாலத்தி கோலம் ஆகும்.
ஒரு முழுமையான வெள்ளை நிற அட்டைகளை எடுத்து , அதில் இந்த நவக்கிரக கோலங்களை தனித்தனியாக வரைந்து அதில் கடையில் விற்கும் சிறிய வண்ண மணிகளைக் கொண்டு (colourful beads) ஒட்டி விடலாம். இப்படி மணிகளைக் கொண்டு ஒட்டிய அட்டைகளை நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அன்றைய நாளுக்கான கோலத்தை கொலு முன்பு வைத்து வழிபட வேண்டும்.
முத்தாலத்தி கோலத்தை நவ தானியங்களைக் கொண்டும் போடலாம். நவக்கிரக கோலங்கள் மட்டும் இன்றி இதரவகை கோலங்களையும் நவதானியங்களை பயன்படுத்தி வரைந்து நவராத்திரி வழிபடலாம்.
முத்தாலத்தி கோலங்களை காண இங்கே கிளிக் செய்யவும்
நவராத்திரி நாட்களில் முத்தாலத்தி வகை கோலம் போட்டு வழிபடுவதால் நவ துர்க்கைகளின் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.