ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட சீதை ஆஞ்சநேயருக்காக ஒரு வடை மாலை தயாரித்து ஆசை தீர சாப்பிடு என்று அன்போடு கொடுத்தார். அதிலிருந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை மிகவும் பிரியமான பொருளாகிவிட்டது.

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்த போது அந்த மலையிலிருந்த பல சருகுகள் அவர் உடம்பை குத்தின..பல பூச்சிகள் அவரை கடித்தன..அவர் உடம்பிற்கு ஏற்பட்ட அவதியை நீக்க வெண்ணை பூசி பிறகு அவரை குளிக்க வைத்தனர்.சந்தனம் பூசுவதும் இதற்காகத்தான். அதன் பிறகே அவர் உடல் குளிர்ச்சி அடைந்தது.