அக்ஷய திருதியை 2024 எப்போது?

அக்ஷய திருதியை 2024 எப்போது?

இந்தியாவில் அக்ஷய திருதியை ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்து கலாச்சார படி இந்த புனித நாளில் நாம் செய்யும் அனைத்து வகையான நற்செயல்களும் சிறப்பாக நடக்கும். அதுமட்டும் இன்றி அக்ஷய திருதியை ஒரு பொன்நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டிற்கு செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படும் இந்த நாள் இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படும் புனித நாள் ஆகும்.

இந்தப் பதிவில் 2024ஆம் ஆண்டு அக்ஷய திருதியை எப்போது என்று பார்க்கலாம் வாருங்கள்.

அக்ஷய திரிதியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:

 • நமது பண்டைய புராணங்கள் மற்றும் வரலாற்றின் படி, இந்த நாள் பல முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கிறது. அவை என்ன என்ன என்பதை காண்போம்.
 • விநாயகப் பெருமானும், வேத வியாசரும் மகாபாரதக் காவியத்தை எழுதியது இந்நாளில்தான்.
 • இந்த நாள் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
 • அன்னபூரணி தேவி இந்த நாளில் பிறந்தார்.
 • இந்த நாளில், கிருஷ்ணர் தனது உதவிக்கு வந்த தனது ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வத்தையும் பண ஆதாயங்களையும் வழங்கினார்.
 • மகாபாரதத்தின் படி, இந்த நாளில் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு பசியடையச் செய்யாத அளவற்ற உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் அக்‌ஷய பாத்திரத்தை அவர்களுக்கு அருளினார்.
 • இந்த நாளில் கங்கை நதி வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியது.
 • இந்த நாளில்தான் குபேரர் லட்சுமி தேவியை வழிபட்டார், இதனால் தேவியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.
 • சமண மதத்தில், இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

அக்ஷய திருதியை 2024 தேதி:

பொதுவாக மக்களிடைய தங்கம் வாங்க ஒரு நல்ல நாள் என்றால் அது அக்ஷய திருதியை தான். அக்ஷய திருதியை என்பது சித்திரை மாதம் கழிந்து முதல் வளர்பிறை திருதியை அட்ஷய திருதியை என்று கூறப்படும். அதாவது, அள்ளிக்கொடுக்கும் வளங்கள் மற்றும் எல்லா நலன்களை பெற்று தருவது இந்த அக்ஷய திருதியை என்பார்கள்.

அக்ஷய திருதியை தினத்தில் ஏதாவது பொருட்கள் வாங்கினால் பல மடங்கு வந்து சேரும் என்பதே ஐதீகம். அதனாலேயே தான் மக்கள் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குகின்றனர். 2024 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (5/10/2024) வருகிறது.

அக்ஷய திருதியை அன்று வாங்க வேண்டியவை:

 • உப்பு, மஞ்சள், சர்க்கரை
 • வெள்ளி
 • தங்கம்
 • அரிசி
 • தேவையான உடைகள்
 • சிறிய பாத்திரம்

அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டியவை:

 • அக்ஷய திருதியை அன்று நம் வீட்டில் பொருட்களை வாங்கி குவிப்பதை விட, மிக சிறந்த ஒன்றை செய்ய வேண்டும் என்றால் அது மற்றவர்களும் தானம் செய்வது. அக்ஷய திருதியை நாளில் செய்யும் தானத்திற்கு அத்துணை மகத்துவம் உள்ளது.
 • 2024 அக்ஷய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது.
  அன்னதானம் வழங்குவதும் சிறப்பு.
 • மற்றவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களையும் கொடுங்கள்.
 • பணமாக செலுத்த வேண்டாம். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்குவது நல்லது.
 • 2024 இல் அக்ஷய திரிதியா நாளில் சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் லட்சுமி தேவி பூமியில் இறங்கி வருவதாக நம்பப்படுகிறது.
 • இந்த நாளில் பசு, யானை போன்ற விலங்குகளுக்கு தீவனம் வைப்பதும், மரங்களை நடுவதும் புண்ணியம் தரும் செயல்கள்.
 • அக்ஷய திருதியை 2024 இந்த நாளில் பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களைச் செய்வது நல்லது.

அனைவரும் வசதிற்கேற்ப பொருட்களை வாங்கி பலனடையுங்கள். அக்ஷய திருதியை நாளில் செய்யும் தானத்திற்கு அத்துணை மகத்துவம் உள்ளது. எனவே உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு ஏதாவது தானம் அளித்து இறையருளால் நன்மைகள் அடையுங்கள்.