Diwali Recipes – Panner Payasam

பன்னீர் பாயாசம்

 

தேவையான பொருட்கள்

பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)

பால் – இரண்டு கப்

கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்

குங்குமபூ – சிறிதளவு

சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)

முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை

* ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.

* கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.

* பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

* ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

* பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.