Diwali Special Recipes – Corn Flour Halwa

கார்ன் ஃபிளவர் ஹல்வா

தேவையான பொருட்கள்

சோள மாவு – அரை கப்

சர்க்கரை – ஒன்றை கப்

தண்ணீர் – இரண்டு கப்

ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

நெய் – மூன்று டீஸ்பூன்

முந்திரி – பத்து

செய்முறை

* ஒரு கிண்ணத்தில் தண்ணீர், சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

* பின், கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

* பின், ஜெல்லி பதம்வந்தவுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி போட்டு இரண்டு நிமிடம் கழித்து அல்வா பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.