Ayyappan Malai Ku Poga – Lord Ayyappa Songs
![](https://divineinfoguru.com/wp-content/uploads/2018/11/Lord-Ayyappa-HD-Wallpaper-23-300x169.jpg)
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் ) பலவருஷம் மலைக்கு போன பழுத்த சாமியை பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும் குருவாக அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும் துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும் காலையிலே நீராடி நீரணியணும் கன்னிமூல கணபதியை நீ நினைக்கணும் மாலையை குரு கையாலே நீ அணியணும் மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும் (ஐயப்பனின்) …