Thiruppugazh Song 132 – திருப்புகழ் பாடல் 132
திருப்புகழ் பாடல் 132 – பழநி தனதன தந்த தனதன தந்ததனதன தந்த …… தனதான கருகி யகன்று வரிசெறி கண்கள்கயல்நிக ரென்று …… துதிபேசிக் கலைசுரு ளொன்று மிடைபடு கின்றகடிவிட முண்டு …… பலநாளும் விரகுறு சண்ட வினையுடல் கொண்டுவிதிவழி நின்று …… தளராதே விரைகமழ் தொங்கல் மருவிய துங்கவிதபத மென்று …… பெறுவேனோ முருக கடம்ப குறமகள் பங்கமுறையென அண்டர் …… முறைபேச முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்சமுரணசுர் வென்ற …… வடிவேலா பரிமள …