Thiruppugazh Song 171 – திருப்புகழ் பாடல் 171
திருப்புகழ் பாடல் 171 – பழநி தனதனன தந்த தத்த தானனதனதனன தந்த தத்த தானனதனதனன தந்த தத்த தானன …… தனதான நிகமமெனி லொன்று மற்று நாடொறுநெருடுகவி கொண்டு வித்தை பேசியநிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள …… பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமரநிபிடமிட வந்து கைக்கு மோதிரநெடுகியதி குண்ட லப்ர தாபமு …… முடையோராய் முகமுமொரு சம்பு மிக்க நூல்களுமுதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்முடிவிலவை யொன்று மற்று வேறொரு …… நிறமாகி முறியுமவர் தங்கள் …