Tag «நட்சத்திர தெய்வங்கள்»
Nakshatra Song for Birth Star Mirugasirisham
மிருக சீரிடம் : பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
Nakshatra Song for Birth Star Swathi
சுவாதி : காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.
Nakshatra Song for Birth Star Ayilyam/Ashlesha
ஆயில்யம் : கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்நீ முழங்கத் திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப் பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.
Nakshatra Song for Birth Star Visakam
விசாகம் : விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லனை நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
Nakshatra Song for Birth Star Anusham
அனுஷம் : மயிலார் சாயல் மாது ஓர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தை தன் குயிலார் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே.
Nakshatra Song for Birth Star Kettai
கேட்டை : முல்லை நன்முறுவல் உமை பங்கனார் தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
Nakshatra Song for Birth Star Moolam
மூலம் : கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி உன் தன் தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏற்றுக்கொள் நீ வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
Nakshatra Song for Birth Star Chithirai
சித்திரை : நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடர்கூற்று உதைத்த பொன் அடியே இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.