Tag «பக்தி கதைகள் சிறுகதைகள்»

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்த போது அவனை ஏற்று கொள்வதில் சுக்ரீவன் கேள்வி எழுப்பிய போது ராமர் கூறிய குட்டி கதை… ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது. நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். …

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் ஒரு நாத்திகன்….கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். “அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்” என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். “கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்” என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக ” கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்” எனச் …

அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன்

யுத்த முடிவில் அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன் பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார். “மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே …

மகாபாரதம் | பார்பரிகா

மகாபாரதம் தெரிந்த புராணம் – தெரியாத கதை பார்பரிகா | பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர் குருஷேத்ர போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க கூடிய ஒரு வீரரின் கதையை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆச்சரியப்படாதீர்கள்! அவரை பார்பரிகா என்றும், காட்டு ஜி. பார்பரிகா என்றும் அழைக்கின்றனர். இவர் பீமனின் பேரனும், கடோட்கஜன் மற்றும் மௌர்வி ஆகியோரின் மகனும் ஆவார். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக …

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன்

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன் பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ”ஐவரின் பத்தினியே… இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் …

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன்

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன் – 1 குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், …

மஹாபாரத கிளைக் கதை | பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்

மஹாபாரத கிளைக் கதை | பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் – கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். …

மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை

மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை புராணங்களில் படித்தவை பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன், தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்தஉப-பாண்டவர்கள் ஐவரையும், பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். (உப-பாண்டவர்கள் – பாண்டவர்களின் மகன்கள்) வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் …

ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன்

ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை. ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன் ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். …