Thayumanavar Songs – பராபரக்கண்ணி
பராபரக்கண்ணி சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்பாராதி யாண்ட பதியே பராபரமே. 1. கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2. சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவவந்த கருணை மழையே பராபரமே. 3. ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4. ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5. உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6. எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்தித்திக்கும் ஆனந்தத் தேவே …