துவாதச லிங்கங்கள் துதி | Thuvathasa Jothir Linga Thuthikal
பாவம் போக்கும் துவாதச லிங்கங்கள் துதி – 12 ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் சிவன் அருள் கிடைக்க அனுதினமும் சொல்ல வேண்டிய 12 ஜோதிர் லிங்க துதிகள்: பரிசுத்தமானதும், மிக்க அழகானதுமான சௌராஷ்டிர தேசத்தில் பக்தியை அளிப்பதற்காக கருணையாய் அவதாரம் செய்தவரும், சந்திரகலையை சிரோபூஷணமாக கொண்டவரும் ஜோதிர்மயமாக இருக்கிறவருமான சோமநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகிறேன். நிகராகக் கூறப்படும் மலைகளுள் பெரியதானதும் தேன்கள் எப்போதும் சான்னித்தமாக இருக்கப்படுகிறதுமான ஸ்ரீசைலம் எனும் இடத்தில் சந்தோஷமாக வசிக்கிறவரும், சம்சார சாகரத்திற்கு …