Thiruppugazh Song 160 – திருப்புகழ் பாடல் 160
திருப்புகழ் பாடல் 160 – பழநிராகம் – நாட்டகுறிஞ்சி; தாளம் – சதுஸ்ர த்ருவம்( எடுப்பு /4/4/40 ), கண்டநடை (35) தனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதன …… தனதான சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவசமயவடி வாய்வந்த அத்துவித மானபரசுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத …… லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலமதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுகசுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய …… உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி …