Tag «முருகன் வழிபாடு முறை»

Kandha Guru Kavasam in Tamil – கந்த குரு கவசம்

Kandha Guru Kavasham – கந்த குரு கவசம் கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுஹா சரணம்; குருபரா சரணம் சரணமடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து …

Shanmuga Kavasham in Tamil – ஷண்முக கவசம்

Shanmuga Kavasham – ஷண்முக கவசம் அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க இரு செவிகளையும் செவ்வேள் …

Murugan 108 Potrigal – முருகன் போற்றிகள்

முருகன் போற்றிகள் ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி ஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றி ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி ஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி ஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி ஓம் ஈசற் இனிய சேயே போற்றி ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி ஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றி ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் …

Murugan Anthathi in Tamil with Meaning – முருகன் அந்தாதி

கந்தசஷ்டி மாவிரத பூசையிற் கந்த புராண படனஞ் செய்ய வேண்டுமென்று நியதியுண்டு. அஞ்ஞான்று அது செய்தற்கியலாதார், இத்திருப்பதிகத்தை ஒருமுறை பக்தியோடும் பாடி அப்படன புண்ணியத்தைப் பெறலாம். -பாம்பன் சுவாமிகள் அந்தாதி கலிவிருத்தம் (இசை) 1. சந்திர சேகரன் றழற்கண் ணேபொறி வந்தன வாறவை மாசில் கங்கை சார்ந் தைந்துட னொன்றணை குழவி யாகியா றந்தநன் மாதர்க ளமுத முண்டவே. சிவபெருமானுடைய நெற்றிக்கண்களினின்று ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்போந்தன. அவை குற்றமற்ற சரவணப் பொய்கையென்னும் நீர் நிலையை அடைந்து …

Murugan Sthuthi – முருகன் ஸ்துதி

முருகன் ஸ்துதி அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா-பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி!

Which is the best day to worship Lord Murugan? – முருகனுக்கு உகந்த கிழமை

முருகனுக்கு உகந்த கிழமை எது? தமிழ்க் கடவுளான முருகனை வழிபடவும் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீரடையும் முருகனுக்கு உகந்த நிறம் எது? முருகனுக்கு உகந்த முக்கிய மூன்று விரதங்கள்? செவ்வாய்க் கிழமை விரதம்

What is the Colour of Lord Murugan? – முருகனுக்கு உகந்த நிறம்

முருகனுக்கு உகந்த நிறம் என்ன? நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த தெய்வமாக முருகனை வழிபாடு செய்கிறோம். செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் முருகனுக்கு சிவப்பு நிறத் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் கொண்டு பூஜை செய்யப்படுகிறது. எனவே முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு நிறமே ஆகும்.

Lord Murugan Virathams

Lord Murugan Virathams There are 3 special Vrathams for Lord Murugan which are listed below. Karthigai Viratham Sashti Viratham Thaipusam Viratham முருகனுக்குரிய விரதங்கள் மூன்று முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம்   செவ்வாய்கிழமை …

Monthly Shasti Viratham – மாத சஷ்டி விரதம்

சஷ்டி திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, …