Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்புநிலை
அன்புநிலை தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம்மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. 1. வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன்ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. 2. சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில்வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. 3. சூத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. 4. அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென்சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. 5. கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோவள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. 6. விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதிஅண்ணாவா வாவென் றரற்றுநாள் …