Thiruppugazh Song 133 – திருப்புகழ் பாடல் 133
திருப்புகழ் பாடல் 133 – பழநி தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததனதனத்ததன தனத்ததனதனத்தனா தனதன …… தனதான கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனையகடைக்கணொடு சிரித்தணுகுகருத்தினால் விரகுசெய் …… மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலைகனத்தவிரு தனத்தின்மிசைகலக்குமோ கனமதில் …… மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளியுனைப்புகழு மெனைப்புவியில்ஒருத்தனாம் வகைதிரு …… அருளாலே உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகியுரைக்கமறை யடுத்து பொருள்உணர்த்துநா ளடிமையு …… முடையேனோ பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழுபடிக்கடலு மலைக்கவலபருத்ததோ கையில்வரு …… முருகோனே பதித்தமர …