திருப்புகழ் பாடல் 10- Thiruppugazh Song 10- கறுக்கும் அஞ்சன விழியிணை – Karukkum Anjana Vizhiyinai
திருப்புகழ் பாடல் 10 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடுநெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொருகனிக்குள் இன்சுவை அழுதுகும் ஒருசிறு …… நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெமனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுறஅணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொரநகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய …… மிடறுடே நடித்தெ ழுங்குரல் …