Aadhi Parasakthi Thuthi in Tamil
ஆதி பராசக்தி துதி அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள் சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் (அகணித தாரா) அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள் ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள் அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம் அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா) அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும் ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும் அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா) கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் …