Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அருளியல்பு
அருளியல்பு ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1. பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2. ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்ததீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3. எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4. சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5. வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6. சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்பூரணதே யத்திற் பொருந்துநாள் …