Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தன் உண்மை
தன் உண்மை உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 1. செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்தஎம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ. 2. தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்தசித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 3. பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 4. அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்கசிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ. 5. முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ. 6. காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்சீலமுடன் …