Thayumanavar Songs – எந்நாள்கண்ணி – தெய்வ வணக்கம்
எந்நாள்கண்ணி தெய்வ வணக்கம் நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1. பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2. நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3. கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4. வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரைஅஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5. ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகைஇச்சையுடன் …