Thayumanavar Songs – எனக்கெனச் செயல்
எனக்கெனச் செயல் எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீநினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1. உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2. என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழைதன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். …