Tag «சிவன் ஆன்மீக கதைகள்»

சிவன் எங்கே இருக்கிறார் | Where is Lord Shiva?

சிவன் எங்கே இருக்கிறார் | Where is Lord Shiva? ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத …

மோட்சம் யாருக்கு? சிவன் பார்வதி கங்கை ஒரு ஆன்மீக கதை | Shivan Parvathi Gangai Spiritual Story

மோட்சம் யாருக்கு? சிவன் பார்வதி கங்கை ஒரு ஆன்மீக கதை | Shivan Parvathi Gangai Spiritual Story ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்” என சொல்கிறார்கள் , ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, …

சிவன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பது ஏன்?

சிவன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பது ஏன்? சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதில்லை. பலரின் வாழ்வில் மரணம் நெருங்கும் அந்தக் கணம், அல்லது கிட்டத்தட்ட மரணம் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நொடி தான், அவர்கள் வாழ்விலேயே மிகத் தீவிரமான நேரமாக இருக்கிறது. இந்தத் தீவிரத்தை …

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை

ராமாயணத்திலிருந்து ஒரு குட்டி கதை விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்த போது அவனை ஏற்று கொள்வதில் சுக்ரீவன் கேள்வி எழுப்பிய போது ராமர் கூறிய குட்டி கதை… ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது. நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். …

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் ஒரு நாத்திகன்….கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். “அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்” என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். “கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்” என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக ” கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்” எனச் …

அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன்

யுத்த முடிவில் அர்ஜுனனின் ஆணவத்தை அழித்த கண்ணன் பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார். “மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே …

மகாபாரதம் | பார்பரிகா

மகாபாரதம் தெரிந்த புராணம் – தெரியாத கதை பார்பரிகா | பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர் குருஷேத்ர போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க கூடிய ஒரு வீரரின் கதையை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆச்சரியப்படாதீர்கள்! அவரை பார்பரிகா என்றும், காட்டு ஜி. பார்பரிகா என்றும் அழைக்கின்றனர். இவர் பீமனின் பேரனும், கடோட்கஜன் மற்றும் மௌர்வி ஆகியோரின் மகனும் ஆவார். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக …

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன்

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன் பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ”ஐவரின் பத்தினியே… இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் …

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன்

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன் – 1 குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், …