Tag «சிவன் துதி பாடல் வரிகள்»

சிவபார்வதி துதி | Shiva Parvati Thuthi

வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற சிவபார்வதி துதி: கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம். மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன். திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல …

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி