Tag «தாயுமானவர் பாடல்கள்»

Thayumanavar Songs – ஆரணம்

ஆரணம் ஆரண மார்க்கத் தாகம வாசி அற்புத மாய்நடந் தருளுங் காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங் கண்கள்மூன் றுடையஎன் கண்ணே பூரண அறிவிற் கண்டிலம் அதனாற் போற்றிஇப் புந்தியோ டிருந்து தாரணி யுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே. 1. இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட் டெவ்வுல கத்தையு மீன்றுந் தடமுறும் அகில மடங்குநா ளம்மை தன்னையு மொழித்துவிண் ணெனவே படருறு சோதிக் கருணையங் கடலே பாயிருட் படுகரிற் கிடக்கக் கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக் …

Thayumanavar Songs – பொன்னை மாதரை

18. பொன்னை மாதரை பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1. தன்ன தென்றுரை சாற்று வனவெலாம் நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன் இன்னம் என்னை யிடருறக் கூட்டினால் பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2. ஆவி யேயுனை யானறி வாய்நின்று சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன் பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3. கோல …

Thayumanavar Songs – நினைவு ஒன்று

17. நினைவு ஒன்று நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளட்டுந் தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல் தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம் பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான் மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1. ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய் கருமொழியிங் …

Thayumanavar Songs – பன்மாலை

16. பன்மாலை பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர் பாமாலைக் கேநீதான் பட்ச மென்று நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர் நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன் சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத் தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என்மாலை யறிந்திங்கே வாவா என்றே எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1. கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன் கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும் …

Thayumanavar Songs – தேன்முகம்

15. தேன்முகம் தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும் நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1. வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால் ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2. கண்டன அல்ல என்றே …

Thayumanavar Songs – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்

ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் ஆகார புவனமின் பாகார மாக அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக் குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல் தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1. அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும் ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத் தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச் சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே இனம்பிரிந்த மான்போல்நான் …

Thayumanavar Songs – சிற்சுகோதய விலாசம்

சிற்சுகோதய விலாசம் காக மோடுகழு கலகை நாய்நரிகள் சுற்று சோறிடு துருத்தியைக் காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர் காமவேள் நடன சாலையை போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும் மலமி குந்தொழுகு கேணியை மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை முடங்க லார்கிடை சரக்கினை மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக வேதம் ஓதியகு லாலனார் வனைய வெய்யதடி கார னானயமன் வந்த டிக்குமொரு மட்கலத் தேக மானபொயை மெய்யெ னக்கருதி ஐய வையமிசை வாடவோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு …

Thayumanavar Songs – தேசோ மயானந்தம்

12. தேசோ மயானந்தம் மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி மன்னுமுனி வர்க்கேவலமாய் மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு கருமருவு காயத்தை நிர்மலம தாகவே கமலாச னாதிசேர்த்துக் காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக் கலைமதியி னூடுதாக்கி உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல் உணர்வான விழியைநாடி ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம் உற்றிடஎன் மனதின் வண்ணந் திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 1. இப்பிறவி என்னுமோர் …

Thayumanavar Songs – சச்சிதானந்தசிவம்

11. சச்சிதானந்தசிவம் பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று படர்வெளிய தாகிஎழுநாப் பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட பகிரண்ட உயிரெவைக்கும் நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத நிர்மலா னந்தமயமாய்ப் பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான் பேரின்ப மெய்திடாமல் பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல் பித்தாக வோமனதைநான் சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ் சாசுவத நிட்டைஅருளாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.1. குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு கொள்ளல்போல் …