Tag «தாயுமானவர் பைங்கிளிக்கண்ணி»

Thayumanavar Songs – பைங்கிளிக்கண்ணி

பைங்கிளிக்கண்ணி அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1. அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2. ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3. ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்துசேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4. ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5. இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்தஅம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6. உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறிசொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ …