Thayumanavar Songs – தேன்முகம்
15. தேன்முகம் தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும் நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1. வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால் ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2. கண்டன அல்ல என்றே …