Tag «பக்தி கதைகள் சிறுகதைகள்»

எந்நாளும் இறைவனோடிரு

எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு) ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் …

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas ஒரு முறை ஒன்பது க்ரஹங்களும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சையில் ஈடுபட்டனர் … எந்த முடிவுக்கும் வர இயலாமல் இந்திரனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டனர்… தனக்கு ஏன் வம்பு என்று நினைத்த இந்திரன் விக்ரமாதித்ய மன்னனுக்கே விடை தெரியும் என்று சொல்லி அனுப்பினான்… விக்ரமாதித்யனுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது… அரசனின் அரியணைக்கு அருகே இருந்து வாசல் வரை வரிசையாக போடப்பட்டு இருந்த அரியணைகளில் அவர்களை …

பாவம் நீக்கும் பல்லி தரிசனம்

பாவம் நீக்கும் பல்லி தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்… இதன் பின்னே இருக்கும் கதையை அறிவோம்… ஸ்ருங்கிபேரரின் புதல்வர்கள் ஹேமன், சுக்லன்… இவர்கள் இருவரும் கௌதம ரிஷியின் சீடர்கள்… ஒருநாள் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்துவிட்டனர்… அபிஷேக நேரத்தின் போது அதை முனிவரிடம் கொடுக்க அதனுள்ளே இருந்து ஒரு பல்லி குதித்து ஓடியது… இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த முனிவர் தன் …

துளசிவனம் | Story of Thulasi

துளசிவனம் துளசி தேவி ஒரு நாள் பெருமாளை வணங்கி ” இலக்குமி தேவி உங்கள் மார்பில் வீற்றிருப்பதைப் போல என்னையும் தடிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டாள்…. அதற்க்கு மகாவிஷ்ணு “தேவியே இலக்குமி தேவி முன்பு கடும் தவம் புரிந்து என் மார்பை இடமாகக் கொண்டாள்… அவள் பூமி தேவியின் வடிவம் கொண்டு மண்ணுலகில் மார்கண்டேய முனிவருக்கு புதல்வியாக பிறக்கப் போகிறாள்… அதற்கு முன்பே நீ அந்த முனிவரின் தபோ வனத்திற்கு சென்று செடி உருவில் …

நகுஷன் | Story of Nahusha

நகுஷன் நகுஷன் என்று ஒரு அரசன் இருந்தான்… இந்திரப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தான்… அதைத் தடுக்க நினைத்த இந்திராணி “உமக்கு இந்திரப் பதவி வேண்டுமானால் சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வரவேண்டும் ” என்றாள்…… சப்த ரிஷிகளும் நகுஷனின் பல்லக்கை சுமந்தனர்… அதில் அகத்தியரும் ஒருவர்…. சீக்கிரம் இந்திர லோகம் சென்று இந்திர பதவியை அடைய வேண்டும் என்ற ஆசையில் சர்ப்ப சர்ப்ப என்றான்…. சர்ப்ப என்றால் சீக்கிரம் என்று …

இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரம்

இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரம் இராமாயணத்தில் சீதையை விட சிறந்த மறக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை பற்றிராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்- தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால், ராமாயணத்தில் ஊர்மிளை …

ராமர் சொன்ன கதை

ராமர் சொன்ன கதை வேடன் ஒருவன்; அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது. அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாகப் பங்காளிகள் அவனை விரட்டி விட்டார்கள். ஒருநாள், வேடன் காட்டில் இருந்தபோது மின்னலும் இடியுமாக, மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில், மேடு, பள்ளங்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு! பறவைகளும் விலங்கு களும் மழையில் நனைந்து, பசியால் சுற்றிக் கொண்டிருந்தன.குளிரால் நடுங்கிய வேடன், தன்னைப்போலவே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் புறாவைப் பார்த்தான்; தன் இயல்புப்படி …