Thayumanavar Songs – பெற்றவட்கே
பெற்றவட்கே பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளைபெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1. ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகிஅப்பனே ஆனந்த அடிக ளேநீவாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய்வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2. நீயேஇங் கெளியேற்குந் தாக மோகநினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலேபேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோபெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3. பாராயோ என்துயரம் எல்லாம் ஐயாபகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்வாராயோ இன்னமொரு காலா னாலும்மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி …