Mahabharatham story in Tamil 87 – மகாபாரதம் கதை பகுதி 87
மகாபாரதம் பகுதி-87 அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் …