Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: மாதர் மயக்கருத்தல்
மாதர் மயக்கருத்தல் மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1. திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2. கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3. காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4. கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்டபெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5. வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்துதூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6. கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்வைச்சிருக்கும் மாதர் …