Tag «முருகன் காவடி பாடல்கள்»

Kandhan Thiruneeru Aninthal – TM Soundarrajan Murugan Devotional Songs

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).

Thanthaikku Guruvagi Thanthitta Swamy Malai – KJ Yesudas Murugan Songs

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை தத்துவப்பொருளுரைத்து கருணை வடிவானவா சுவாமிநாதா சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை) பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ முத்துக்குமரனையே வணங்கிடுவோம் முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய் நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம் நினைத்தாலும் அழைத்தாலும் நீ துணையாகி அருள் தரவே வருவாயப்பா உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை) திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன் தோகையில் வாகனமதில் நீயே வா …

KJ Yesudas Murugan Songs – Thiruchendurin Senthil Muruga

திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா கடலலையோரம் நின்று அருள்செய்பவா ஓம் சரவணபவ சரணம் (திரு) தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய் மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய் ஞானவேலா ஞானத்தின் தலைவா ஔவைபோற்றிய மெய்யான தேவா சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு) வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய் பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய் செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே வீரனே வெற்றிவேல் ஏந்தும் …

Sakthi Shiva Muthukumarane Muruga – KJ Yesudas Devotional Songs

சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன் சரவணஞான குருபரனே கந்தா கடம்பா கண்டிகதிர் காமவேலனே வாராய் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய் தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு தாமதம் ஏன் திருமுருகையா (மெய்) காவடி …

Pazhamudir Solaithanile Painthamizhil Padi – KJ Yesudas Murugan Songs

பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா அடியவர் குறைதீர்த்து ஆனந்த வாழ்வு தந்து எந்நாளும் நன்னாளாய் ஏற்றமுடன் …

KJ Yesudas Murugan Devotional Songs – Thiruthani Malaiyinile Thirunaalam

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க கனிவுடன் வேண்டியதை …

Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kanthan Karunai Songs

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு …

TM Soundarrajan Murugan Songs – Kandhan Kaladiyai Vananginal

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை …

Muruganai Koopittu Muraiyitta Perukku – TM Soundarrajan Murugan Songs

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் …