Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: யாக்கையைப் பழித்தல்
யாக்கையைப் பழித்தல் சுக்கிலமும் நீருஞ் சொரிமலமும் நாறும்உடல்புக்குழலும் வாஞ்சையினிப் போதும்என்ப தெந்நாளோ. 1. நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்பார்க்குமிடத் திதன்மேற் பற்றறுவ தெந்நாளோ. 2. காக்கைநரி செந்நாய் கழுகொருநாள் கூடியுண்டுதேக்குவிருந் தாம்உடலைச் சீஎன்ப தெந்நாளோ. 3. செங்கிருமி யாதி செனித்தசென்ம பூமியினைஇங்கெனுட லென்னும் இழுக்கொழிவ தெந்நாளோ. 4. தத்துவர்தொண் ணூற்றறுவர் தாமாய்வாழ் இந்நாட்டைப்பித்தன்நான் என்னும் பிதற்றொழிவ தெந்நாளோ. 5. ஊனொன்றி நாதன் உணர்த்தும்அதை விட்டறிவேன்நானென்ற பாவிதலை நாணுநாள் எந்நாளோ. 6. வேலையிலா வேதன் விதித்தஇந்த்ர சாலவுடல்மாலைவியா பார …