Thiruppugazh Song 240 – திருப்புகழ் பாடல் 240
திருப்புகழ் பாடல் 240 – திருத்தணிகைராகம் – நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியா; தாளம் – ஆதி தனதன தனதன தனதன தனதனதனதன தனதன …… தனதான அரகர சிவனரி அயனிவர் பரவிமுனறுமுக சரவண …… பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்அநலென எழவிடு …… மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர்உளமதி லுறவருள் …… முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுகபரமன திருசெவி …… களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதைஉரைதரு குருபர …… வுயர்வாய உலகம னலகில வுயிர்களு …