ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்
ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் ஒரு நாத்திகன்….கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். “அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்” என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். “கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்” என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக ” கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்” எனச் …