Pepper Lamp for Bhairava in Tamil – மிளகு தீபம்
கால பைரவரை அஷ்டமி திதியில் ராகு நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பாகும். கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீரடையும். மிளகு தீபம் ஏற்றுவது எப்படி? ஒரு வெள்ளை நிற புதியத் துணியில், 27 மிளகுகளை எடுத்து, துணியை முடிந்து திரி போல முடிந்து கொள்ள வேண்டும். பிறகு மிளகைத் துணியோடு நல்லெண்ணையில் ஒரு இரவு முழுவதும் நனைத்து வைக்க வேண்டும். …