Tag «lord murugan images hd 1080p»

Thiruchenthurin Senthil Muruga

திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா கடலலையோரம் நின்று அருள்செய்பவா ஓம் சரவணபவ சரணம் (திரு) தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய் மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய் ஞானவேலா ஞானத்தின் தலைவா ஔவைபோற்றிய மெய்யான தேவா சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு) வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய் பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய் செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே வீரனே வெற்றிவேல் ஏந்தும் …

Meiyana Deivame Vendukiren

மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய் தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு தாமதம் ஏன் திருமுருகையா (மெய்) காவடி எடுத்து வந்து சேவடி தொழுவேன் தேனால் அபிசேகம் தினம் தினம் செய்தேன் எண்ணற்ற மலர்தொடுத்து …

Palamutir colaitanil Paintamil Padi

பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா அடியவர் குறைதீர்த்து ஆனந்த வாழ்வு தந்து எந்நாளும் நன்னாளாய் ஏற்றமுடன் …

Thiruthani Malaiyinile Tirunalam

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க கனிவுடன் வேண்டியதை …

Tirupparangundrattil Nee Sirittaal

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார …

Kandan Kaaladiyai Vananginaal

கந்தன் காலடியை வணங்கினால் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி …

Muruganai kooppittu muraiyitta perukku

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் …

Muruga Nee Vara Vendum

முருகா நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் உனையே நினைந்து உருகுகின்றேனே உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே நினைத்தபோது நீ வர …