Tag «lord murugan pictures»

Saravanabava Thaththuvam

சரவணபவ தத்துவம் சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை …

Mudhal Vanakkam Muruganukke

முதல் வணக்கம் முருகனுக்கே பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தை …

Vinnukkum Mannukkum Naduvirundhu

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ (மண்ணுக்கும் விண்ணுக்கும்) பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ (மண்ணுக்கும் …

Maha-Mantra of Sri Subrahmanya Sataksari Stotaram

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம் ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம் அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம். இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம். சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம் சரண்யம் …

Ulagangal Yaavum Un Arasaangamae

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே! நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்! (உலகங்கள் யாவும் உன்) மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்! தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்! ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே! உந்தன் வரம் வேண்டுமே! (உலகங்கள் யாவும் உன்) …

Muruga Enralaikkava ?

முருகா என்றழைக்கவா? முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்? ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா! (உன்னை… முருகா என்றழைக்கவா?) நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா – அந்தப் பாவினிலே மனமுருகி நின்றாயப்பா – உலகுக்குப் …

Muthal Vanakkam engal Muruganuke

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே முன்னின்று காக்கும் இறைவனுக்கே புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால் பூச்சொரிந்தே மனம் பாடி வரும் (முதல்) சிம்மாசனம் போன்ற மயிலாசனம் செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல் அடியார் தம் இதயங்கள் குடி மக்களே அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே (முதல்) முதல் சங்கம் உருவாக மொழியானவன் இடைச் சங்கம் கவிபாட புகழானவன் கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன் கடல் கொண்டும் அழியாத தமிழானவன்! (முதல்)

Kalai Ilam Kathiril Unthan Katchi Theriyuthu

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது! (காலை இளம் கதிரில்) கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது! (காலை இளம் கதிரில்) (முதல்) மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக் கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது! …

Ammavum Neye! Appa Vum Neeye!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! (அம்மாவும் நீயே!) தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே! மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே! எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே? இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ? முருகா முருகா முருகா முருகா (அம்மாவும் நீயே!) பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே! ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே …